தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியாரின் உருவச் சிலை அவமதிப்பு: கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் வலியுறுத்தல்! - பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அறிக்கை

சென்னை: பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து, மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அறிக்கை
பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அறிக்கை

By

Published : Sep 27, 2020, 3:41 PM IST

திருச்சியில் பெரியாரின் சிலையை அவமதித்த சமூக விரோதிகளின் மீது கடும் நடவிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறித்திவரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அண்மையில் கோவையில் தந்தை பெரியாரின் சிலையை அவமதித்தவர்கள் மீதும், இந்து மதம் குறித்து தவறாக பேசியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகும் இத்தகைய செயல்களில் ஈடுபட சில மிருகங்கள் துணிகின்றன என்றால், அவர்களின் பின்னணியில் மிகப்பெரிய சக்திகள் இருக்கின்றன என்று தான் அர்த்தம். தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து, நல்லிணக்கத்தை சிதைத்து, அரசியல் லாபம் தேடும் சக்திகள் தான் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய செயல்களை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது.

சிலைகளை அவமதிப்பவர்களை விட, அவ்வாறு செய்யும்படி மற்றவர்களை தூண்டுபவர்கள் தான் மிகவும் கொடியவர்கள், ஆபத்தானவர்கள். அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களின்படியும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உளவுத் துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சி இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு காவி சாயம்!

ABOUT THE AUTHOR

...view details