கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். இந்த ஊரடங்கினால், குடிபெயர்ந்த தொழிலாளர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து சத்தீஸ்கருக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்துசென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட கலைப்பினால், அவுரங்காபாத் ரயில் பாதையில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது, சரக்கு ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 14 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.