இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மூன்றாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று அறிவித்திருந்தது. ஆனால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறைக்கு வந்த முதல் நாளே, மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கான அரசு கூறியுள்ள காரணத்தை சற்றும் ஏற்க முடியாதது. தமிழ்நாடு மாநில எல்லைகளில் உள்ளவர்கள் மது அருந்துவதற்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு எவரேனும் சென்றால், அவர்களைப் பிடித்து 14 நாள்கள் தனிமைப்படுத்துகிறார்கள்.
'டாஸ்மாக்கை மூடி மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்' - ராமதாஸ்
சென்னை: மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, அவற்றைத் திறக்கும் முடிவை அரசு கைவிட்டு, மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் மது அருந்த அண்டை மாநிலங்களுக்குச் சென்றால், அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தனிமைப்படுத்த வேண்டும். அத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால், எவருக்கும் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது அருந்தும் துணிச்சல் வரவே வராது. அதைவிட தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து வைத்து சூழலைக் கெடுப்பது நியாயமல்ல.
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கடந்த 40 நாள்களாக இல்லாது இருந்த சட்ட ஒழுங்கு பிரச்னை மீண்டும் தலைதூக்கும். எனவே மதுக்கடைகளைத் திறப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, அம்முடிவை அரசு கைவிட்டு மதுவிலக்கை அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மது மயக்கத்தில் தேனீயாய் மாறிய வாடிக்கையாளர்கள்!