சென்னை: ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவையடுத்து அந்த இடத்தை காலி இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேபோல் அதிமுக சார்பில் எம்.பி.,யாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் எம்எல்ஏக்கள் ஆனதால் தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். எனவே காலி இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கிடையே மாநிலங்களவைக்கான தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்தது. அதன்படி, முதல்கட்டமாக செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு காலி இடத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து திமுக சார்பில் அக்கட்சியின்வெளிநாடு வாழ் இந்திய நல அணியின் இணை செயலாளர்எம்.எம். அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக போட்டியிடவில்லை
இதனையடுத்து அவர் சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதிமுகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை.