தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ் மேனன் தாயார் காலமானார்! - etv bharat

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் இன்று இயற்கை எய்தினார்.

ராஜீவ் மேனன் தாயார் காலமானார்
ராஜீவ் மேனன் தாயார் காலமானார்

By

Published : Aug 2, 2021, 3:21 PM IST

Updated : Aug 2, 2021, 5:24 PM IST

சென்னை:பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் (80), காவேரி மருத்துவமனையில் இன்று (ஆக. 2) மதியம் 12 மணிக்கு இயற்கை எய்தினார்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன், சமீபத்தில் ஜீ.வி. பிரகாஷ் நடித்த சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கினார். இவரது தாயார் கல்யாணி மேனன்.

பின்னணி பாடகியான இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் காதலே காதலே பாடலை பாடியவர் இவரே. இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு உள்ளார். கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை (ஆக. 3) பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா: அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நெசவுத் தொழில்

Last Updated : Aug 2, 2021, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details