தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: ராஜீவ் மேத்தா - ஒலிம்பிக் போட்டி

சென்னை: இந்தியாவில் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.

rajiv mehta

By

Published : Oct 4, 2019, 8:25 PM IST

விளையாட்டுத் துறையில் வரலாற்று அறிஞர் முத்தையா எழுதிய ’தமிழ்நாடு குவெஸ்ட் ஃபார் கோல்ட்’ என்ற புத்தகத்தை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இயக்குனர் வினோத் குமார் திவாரி வெளியிட, இந்திய ஒலிம்பிக் அசோஷியேஷன் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு ஒலிம்பிக் அசோஷியேஷன் சார்பில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

ராஜீவ் மேத்தா செய்தியாளர் சந்திப்பு

விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் மேத்தா, "ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தல் 2020- 21ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்படும். இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியினை 2026ஆம் ஆண்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். 2032ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியில் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் வீரர்களுக்காக தயாராகும் பிரத்யேக இகோ பிரெண்ட்லி மெத்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details