தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார மந்த நிலை சுழற்சி முறையிலானதே: ராஜீவ் குமார் - reserve bank of india

சென்னை: நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை சுழற்சி முறையிலானதே என்று நீத்தி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்தார்.

rajiv kumar

By

Published : Sep 18, 2019, 9:02 PM IST

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் "ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவது" குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வருங்கால தேவையை பூர்த்தி செய்ய ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவது அவசியம் என்றார். தற்போதைய சூழலில் உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் உள்ளதாகவும் உலக வர்த்தகம் நிச்சயமற்றதாக உள்ளதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், 2025ஆம் நிதியாண்டிற்குள் பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற ஆண்டுதோறும் 8 விழுக்காடு ஜிடிபி வளர்ச்சி தேவை என்றார். தொடர்ந்து, விவசாயத் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் அவர் பட்டியலிட்டார். விவசாய உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை வேறு தொழில்களுக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார்.

பொருளாதார மந்த நிலை சுழற்சி முறையிலானதே: ராஜீவ் குமார்

வங்கி இணைப்பு, நாட்டின் நிதிப் பற்றாக்குறை, ஏற்றுமதி, எரிசக்தி துறை ஆகியவற்றில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார். இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துவரும் ஊக்க நடவடிக்கைகளால் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு வரும் என்றும் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் பேசுகையில், தற்போதைய மந்த நிலைக்கு அமைப்பு ரீதியிலான பிரச்னைகள் மற்றும் சுழற்சி முறையிலான பிரச்னைகளும் காரணம் என்றார். அதேநேரத்தில் நாட்டில் வேலைவாய்ப்புகளை பெருக்கி, வறுமையை போக்க பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றார். ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட, ஆண்டுதோறும் எட்டு முதல் ஒன்பது சதவிகித ஜிடிபி வளர்ச்சி தேவை என்றார்.

ABOUT THE AUTHOR

...view details