தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினி, முருகன் வாட்ஸ்அப்பில் உரையாட அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு! - ராஜிவ் காந்தி கொலை வழக்கு

சென்னை: வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rajiv gandhi assassination case
rajiv gandhi assassination case

By

Published : May 15, 2020, 5:10 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் ஆகியோர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், நளினி, முருகன் ஆகியோர் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள சகோதரியிடமும் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'நடமாடும் கரோனா மையங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை' - மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details