முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 அண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவர் சிறைத்துறை டிஐஜிக்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் கோரி தொடர்ந்த இந்த வழக்கானது நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறைத்துறையின் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.