தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முருகனுக்கு பரோல் மறுப்பு, மனைவி நளினி மனு வாபஸ் - சிறைத்துறை டிஐஜியிடம் மேல் முறையீடு செய்யலாம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி முருகனுக்கு பரோல் மறுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ் OR சிறையில் இருந்த போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு - சிறைத்துறை விளக்கம்..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரி மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ் OR சிறையில் இருந்த போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு - சிறைத்துறை விளக்கம்..

By

Published : Jun 6, 2022, 1:40 PM IST

சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழ்நாடு அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன்.

ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி முருகன்

மருத்துவ காரணங்களுக்காகக் கணவர் முருகனை 6 நாள்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கணவர் முருகனை 6 நாள்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதனிடையே, இந்த மனு இன்று (ஜூன் 6) நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் இருந்த போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

அதை எதிர்த்து சிறைத்துறை டிஐஜியிடம் மேல் முறையீடு செய்யலாம் என சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி முருகன்

இதையடுத்து, சிறைத்துறை டிஐஜியிடம் மேல் முறையீடு செய்யும்படி அறிவுறுத்தியதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details