தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முதன்முறையாக பரோல் கேட்டு முருகன் சார்பில் மனு தாக்கல் - rajiv gandhi assassination case

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் சார்பில் முதன்முறையாக பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முருகனுக்கு பரோல் வழங்க மனுத் தாக்கல்
முருகனுக்கு பரோல் வழங்க மனுத் தாக்கல்

By

Published : Mar 14, 2022, 7:37 PM IST

சென்னை:நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால், மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும்.

முருகன் வேலூர் சிறையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அமைச்சரவை முருகன் உள்பட ஏழு பேரையும் அரசியலமைப்புச் சட்ட 161 பிரிவின்கீழ் முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு, நீட்டிக்கப்பட்டுள்ளது. முருகனை பரோலில் விடுவிக்க மனு அளித்தும் சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முருகனும் உடல்நலக்குறைவுடன் உள்ளதால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். எனவே 30 நாள்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க:'மெயின் ரோட்டில்' அராஜகம் - ஜெயக்குமார் மீது ஆர்.எஸ்.பாரதி சாடல்

ABOUT THE AUTHOR

...view details