தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் அண்மையில் இணைந்த ராஜீவ் காந்திக்கு புதிய பொறுப்பு! - DMK Joint Secretary for Communications

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rajivgandhi
Rajivgandhi

By

Published : Feb 4, 2021, 7:50 AM IST

நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளரும், அக்கட்சியின் ஊடக பிரதிநிதியாகவும் இருந்தவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி. கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து விலகிய ராஜீவ் காந்தி, இந்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தற்போது திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ராஜீவ் காந்தியை திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.

புதிய பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜீவ் காந்தி, "சமூகநீதி, மாநில உரிமை, மொழி மீட்பு, மதச்சார்பின்மை அரசியலில் உடன் பிறப்புகளின் அரசியல் குரலாக எமது குரல் மக்களிடம் ஒலிக்கும்.

ராஜீவ் காந்தி ட்விட்டர் பதிவு

நம்பிக்கையுடன் இந்த பெரும் பணியை எனக்கு அளித்த கழக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details