இந்தியை பொது மொழியாக்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு ரஜினிகாந்த் எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சித்துவருகிறது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்களும் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்தி திணிப்பு பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!
தென்னிந்திய மக்களிடம் இந்தியை திணிக்க முடியாது என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
rajini on hindi imposition
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுவான மொழி இருந்தால் நாடு வளர்ச்சியடையும், ஆனால் இந்தியாவுக்கு பொதுவான மொழி கிடையாது. இந்தி திணிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதிலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்கள் அதை நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இந்தி பேசாத மக்களிடம் இந்தியை திணிப்பதை வட மாநிலங்களும் கூட ஏற்காது என தெரிவித்துள்ளார்.