கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களின் மனத்தில் எழுந்த வண்ணம் இருந்தது. தனது தீவிர ரசிகர்களுக்கு ரஜினி செய்தி வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைக் கொண்டாடும்விதமாக அவரது ரசிகர்கள், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என ரஜினி தகவல் வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள் கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "வரும் சட்ட மன்றத் தேர்தலில் மக்களுடை பேராதரவுடன், வெற்றிப் பெற்று நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!
ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் அரசியல் நுழைவு அறிவிப்பு வரும் நாள்களில் எந்தளவுக்குத் தாக்கதை ஏற்படுத்தும் என அடுத்தடுத்த நாள்களில்தான் தெரியவரும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.