தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுபவமே பாடம் - ரஜினிகாந்த் ட்வீட் - rajinikanth tweet We should have appealed to the corporation

rajinikanth tweet We should have appealed to the corporation.   The mistake could have been avoided.
rajinikanth tweet We should have appealed to the corporation. The mistake could have been avoided.

By

Published : Oct 15, 2020, 11:05 AM IST

Updated : Oct 15, 2020, 11:46 AM IST

11:02 October 15

சென்னை: ராகவேந்திரா மண்டபம் சொத்துவரி விவகாரத்தில் ‘அனுபவமே பாடம்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த ட்வீட்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், 'கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகவே, ஊரடங்கு காரணமாக தனக்கு சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதுவரை அபராதமோ? வட்டியோ? விதிக்கக் கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், 'நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாள்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், 'நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிப்பேன்' என்றும் எச்சரித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை (அக். 14) வழக்கைத் திரும்பப் பெறுவதாக ஆன்லைன் மூலமாக ரஜினி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், 'ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில், நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் தவறைத் தவிர்த்திருக்கலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், '#அனுபவமே_பாடம்' என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'பொய்யாக சாதி குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளார்' - மன்னம்பந்தல் ஊராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

Last Updated : Oct 15, 2020, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details