தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த ரெட் பட்டனா! இணையத்தை வட்டமடிக்கும் ரஜினியின் க்யூட் செல்பி வீடியோ! - Rajini Selfie video

Actor Rajinikanth Selfi video : அமெரிக்கா சென்று உள்ள ரஜினிகாந்த் தனது கார் ஓட்டுநருடன் இணைந்து செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டது வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் முதல் செல்ஃபி வீடியோவை பதிவிட்ட ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 9:49 AM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், செல்பி வீடியோ எடுப்பது குறித்து தனது கார் ஓட்டுநரிடம் சந்தேகங்களை கேட்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பட்டிதொட்டி எங்கும் படம் வசூல் மழை பொழிந்தது. இந்தியா மட்டுமின்றி ஜப்பான், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று நடிகர் ரஜினிகாந்த் ஓய்வை கழித்து வருகிறார். அடுத்ததாக, ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இது அவரது 170 வது திரைப்படமாகும்.

தலைவர் 170 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்த அனிருத், இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.

இதையும் படிங்க:"விரைவில் அக்ஸர் பட்டேல் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க வேண்டும்" - அஸ்சர் பட்டேலின் சகோதரர் கருத்து!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா சென்றார். வழக்கமான முழு உடல் ஆரோக்கிய பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் சிறிய விடுமுறையை கொண்டாடி வரும் ரஜினி, தனது முதல் செல்பி வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மேலும், அந்த வீடியோவில், செல்பி வீடியோ எடுப்பது குறித்த சந்தேகங்களை கார் ஓட்டிக் கொண்டு இருப்பவரிடம் ரஜினிகாந்த் கேட்டு தெரிந்து கொள்வார். ரஜினியின் இந்த செயலை அவரது ரசிகர்கள் க்யூட் என சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர். கேமராவை பிடித்து கொண்டு, வீடியோவை பதிவு செய்ய சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டுமா? என்று தனது அருகில் இருப்பவரிடம் ரஜினிகாந்த் கேட்கிறார்.

அதனைத் தொடர்ந்து, வீடியோவை பதிவு செய்யத் தொடங்கியவுடன் உடன் இருப்பவரிடம் வீடியோ பதிவாகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சியில் உரிய மதிப்பெண் இருந்தும் நிராகரித்தது ஏன்? - நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி கருத்து

ABOUT THE AUTHOR

...view details