தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் முதலில் இருந்தா..?' - குழப்பும் ரஜினிகாந்த்! - பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

சென்னை: 'காலம் எப்போதும் பேசாது; ஆனால் காலம் தான் பதில் சொல்லும்' என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Rajinikanth

By

Published : Jun 29, 2019, 11:31 PM IST

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ புத்தகத்தின் புத்தக வெளியிட்டு விழா சென்னை தி. நகரில் உள்ள வாணி மஹாலில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'காலம் எப்போதும் பேசாது; ஆனால் காலம் தான் பதில் சொல்லும்'

இந்த விழாவில் ரஜினிகாந்த், "காலம் எப்போதும் பேசாது; ஆனால் காலம் தான் பதில் சொல்லும். இளைய தலைமுறையினரின் கைகளில் சாலமன்பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல் இருக்க வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை; புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details