நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் தனது பண்னை வீட்டில் சிகிச்சை பெற்று வருவாதாகவும் காலை முதல் செய்தி வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார். அவர், “ரஜினிக்கு காய்ச்சல் என்று பரவும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில்தான் இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.