தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நுங்கம்பாக்கம் காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் ! - Chennai Chess Olympiad

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு!
நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு!

By

Published : Jul 29, 2022, 12:52 PM IST

சென்னை: 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

இவர்களை ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடம் வரை, பாதுகாப்பாக அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதற்காக காவல்துறையின் சார்பில் சிறப்பு கான்வாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரவி அபிராம் உத்தரவின் பேரில், நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான காவல்துறையினர் கான்வாய் மூலம் நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்று, நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

நன்றி சொல்லும் விதமாக காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவலர்களை பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதையும் படிங்க:"சென்னைக்கு வருவதே இதற்குதான்"... செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் 8 வயது சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details