தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எனக்கு காவிச் சாயம் பூச முடியாது - ரஜினிகாந்த் - Rajinikanth on BJP

சென்னை: எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெற்றுவருகிறது, ஆனால் அதில் சிக்கமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajini

By

Published : Nov 8, 2019, 11:46 AM IST

Updated : Nov 8, 2019, 1:39 PM IST

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை நிறுவி திறந்துவைத்தார். இதில் கலந்துகொண்ட பின் வீடு திரும்பிய ரஜினிகாந்த், "பாஜகவின் நிறமான காவியை எனக்குப் பூச முயற்சி நடைபெறுகிறது. நான் அதில் சிக்கமாட்டேன். எனக்கு ஒருபோதும் காவிச்சாயம் பூச முடியாது.

Rajinikanth

திருவள்ளுவருக்கு காவி நிறத்தை பூசியதுபோல் எனக்கு பூச முயற்சி நடைபெற்றுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது. பாஜகவில் இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசவில்லை" என்றார்.

Last Updated : Nov 8, 2019, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details