தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

தனது மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் எனும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-October-2021/13457682_rajini1.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-October-2021/13457682_rajini1.JPG

By

Published : Oct 26, 2021, 6:09 AM IST

சென்னை: எழுதப் படிக்க தெரியாதவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது கருத்துக்களை, சொந்த குரலின் மூலம் பதிவிட உதவும் 'ஹூட்' எனும் செயலியை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் டெல்லியில் இருந்தபடியே நேற்று (அக்.25) தொடங்கி வைத்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான தனது முதல் குரல் பதிவுடன் இந்தச் செயலியை அறிமுகம் செய்தார். வருங்காலத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போல, இந்தச் செயலி பிரபலமடைய வாழ்த்துவதாகவும் தனது குரல் பதிவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவு

இந்தியாவிலிருந்து உலகத்துக்காக...

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹூட் - குரல் சார்ந்த சமூக வலைதள செயலி, இந்தியாவிலிருந்து உலகத்துக்காக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செயலி உருவாக்கம் குறித்து சௌந்தர்யா பேசுகையில், “கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போலல்லாமல் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும்.

எனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது. ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே இந்த செயலியை உருவாக்க காரணம். தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் 'ஹுட்' வெளியிடப்பட்டுள்ளது. இந்த தளம் அனைவருக்குமானது என்ற அடிப்படையில் சமஸ்கிருத மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:தாதா சாகேப் பால்கே ரஜினி...சிறந்த நடிகர் தனுஷ் - புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details