சென்னை:தூத்துக்குடி மாவட்டம், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இந்தச்சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச்செயலகத்தில் சந்தித்து அளித்தார். பின்னர் பசுமை வழிச் சாலையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்' - ரஜினிகாந்த் - rajinikanth
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து, ரஜினிகாந்த் தரப்பு விசாரணையில் தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் உணர்ச்சி வசப்பட்டு கருத்து தெரிவித்ததாகவும் விளக்கமளித்ததாக விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
!['தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்' - ரஜினிகாந்த் ’தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்’ - ரஜினிகாந்த்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15318919-thumbnail-3x2-rajini.jpg)
’தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்’ - ரஜினிகாந்த்
அப்போது, ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தியதை குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு,”நடிகர் ரஜினிகாந்த் இந்தச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில், அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது தனக்கு இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை எதுவும் தெரியாது எனவும்; தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை எனவும்; உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்” என அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.