சென்னை:மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் அரை இறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியை நேரடியாக பார்ப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர், நவம்பர் 14ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றிருந்தனர்.
அங்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா உடன் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தனர். அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அரை இறுதி போட்டியைப் பார்க்கச் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், விமானம் மூலம் நேற்று (நவ.16) மாலை சென்னை வந்தடைந்தனர். இதனிடையே மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த, இரு சிறுமிகள் உள்பட ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலர் சென்னை விமான நிலையத்தில் ரஜினியின் வருகைக்காக காத்திருந்தனர்.
இதையும் படிங்க:ஏப்ரலில் ரஜினி 171 படப்பிடிப்பு - லோகேஷ் கனகராஜ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!