தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரவு நீண்ட நேரமாக செல்போன் கடை திறந்துவைத்திருந்ததால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும், மகனும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.
ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் - ஜெயராஜ் குடும்பம்
சென்னை: சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்.
அவர்களைக் காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் அடித்து துன்புறுத்திய காவலர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுதொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இதனையடுத்து ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ஜெயராஜ் குடும்பத்தை தொடர்புகொண்டு தனது ஆறுதலை தெரிவித்ததாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.