தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹீராபென் மோடி மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்! - Rajinikanth condoles Heeraben Modi on Twitter

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹீராபென் மோடி மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்!
ஹீராபென் மோடி மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்!

By

Published : Dec 30, 2022, 3:42 PM IST

Updated : Dec 30, 2022, 3:54 PM IST

சென்னை:பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100), இன்று (டிச.30) உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இதனையடுத்து பிரதமர் மோடி, அகமதாபாத்தில் அவரது தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். இதனிடையே பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மதிப்பிற்குரிய மோடி, உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள். அம்மா!” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி

Last Updated : Dec 30, 2022, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details