தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்! - Rajinikanth condolence tweet

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வசந்தகுமாரின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

By

Published : Aug 28, 2020, 9:37 PM IST

காங்கிரஸின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் உடல்நலகுறைவு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஆக.28) செய்தி வெளியிட்டது. இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எச். வசந்தகுமார் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரை சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமார் எம்.பி., மறைவு: தலைவர்கள் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details