சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டையில் நாளை (டிசம்பர் 12) ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி கோயிலில் அவர் பெயரில் சிறப்பு பூஜை, யாகங்கள் நடைபெற்றன.
ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிபெற சிறப்பு பூஜை - கட்சி ஆரம்பித்த ரஜினி
சென்னை: ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிபெற வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
rajinikanth
ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் ரஜினிகாந்த் வரும் தேர்தலில் அரசியலில் வெற்றிபெறவும் உடல்நலத்துடன் இருக்கவும் சிறப்பு பூஜை செய்து யாகம் செய்யப்பட்டது.
வடசென்னை மாவட்டச் செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.