ஹைதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று (டிச. 25) காலை அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாள்களாக, ஹைதராபாத்தில் நடந்துவந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு வந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி - மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி
13:12 December 25
படப்பிடிப்பிற்குப் பின்னர், கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்திற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் அவர் ஏற்கனவே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்தின் உடல் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு, உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரத்த அழுத்தம் சீராகும் வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும், வேறு எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.