தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு - "என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை!" - ரஜினிகாந்த்

கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த அறிவிப்பு
கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த அறிவிப்பு

By

Published : Dec 29, 2020, 11:54 AM IST

Updated : Dec 29, 2020, 1:43 PM IST

12:57 December 29

கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

11:52 December 29

கட்சி தொடங்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த அறிவிப்பு

இது குறித்து அவர் தனது ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உயிர் போனாலும் பரவாயில்லை

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக, என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை.

என்னை மன்னியுங்கள்

நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்; இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்.

பலிகடா ஆக்க விரும்பவில்லை

என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை! என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார்.

ஆண்டவனின் எச்சரிக்கை 

நான் கட்சி ஆரம்பித்தப் பிறகு, ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்புரை செய்தால், மக்கள் மத்தியில், நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். 

நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பரப்புரைக்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் 3 நாள்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி, புதிய வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துகொண்டிருக்கிறது. 

பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும் நான், இந்த கரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து பரப்புரையின்போது, என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி, என்கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Last Updated : Dec 29, 2020, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details