தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகாரமில்லாதவர்களை சீண்டும் ரஜினியின் வசனங்கள் படங்களை ஓட வைப்பதற்கு மட்டுமே - acto rajini

ரஜினி தனது படத்தில் அதிகாரத்தில் இல்லாதவர்களை சீண்டுவது, சளைத்தவர்களை சாடுவது போன்ற வசனங்களை வைப்பது அவரது படத்தை சர்ச்சைகளுடன் அதிக நாட்களுக்கு ஓடவைப்பதற்கான யுக்தியே என்கிறார்கள் அவரது செயலை நீண்ட நாள்களாக கவனித்து வருபவர்கள்.

சென்னை மாவட்டச் செய்திகள்  rajini use political dialogue in his movie for movie running  தர்பார் திரைப்படம்  நடிகர் ரஜினிகாந்த்  acto rajini  dharbar movie review
Dharbar

By

Published : Jan 9, 2020, 7:53 PM IST

Updated : Jan 9, 2020, 11:44 PM IST

ரஜினி பல படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பாக படையப்பா என்கிற படத்தில் பெண்களுக்கு அடக்கம் வேண்டும், அகம்பாவம் கூடாது என்கிற பாணியில் அவர் பேசிய வசனம் கிட்டத்தட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழியான சசிகலா ஆகியோரைத் தாக்குவதாக எண்ணி தமிழ்நாடு ரசிகர்கள் ரசித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களை அரசியல்வாதிகள் உட்பட அனைத்து மக்களுமே ரசித்தார்கள் என்றே சொல்லலாம்.

இதன் பின்னர் வந்த படங்களில் அவர், தான் அரசியலுக்கு வர தயாராகிவிட்டதாக இலைமறை காயாக சொல்லிவந்தார். ஆனால், இன்றுவரை அவர் அரசியலுக்கு நேரடியாக வராமலேயே இருக்கிறார். சமீபத்தில் ரஜினியை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்தார் என்ற வதந்தி பரவியது. பின்னர் அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லையென்று ரஜினி தரப்பில் கூறப்பட்டது.

தர்பார்

இந்நிலையில், இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தர்பார் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திலும் ரஜினி வழக்கம்போல் அரசியல் பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக சசிகலாவிற்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருப்பது பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ”ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் சசிகலாவிற்கு எதிராக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

ஆனால் அரசியல் நோக்கங்களைப் பொறுத்தவரை, ரஜினி எப்போதும் சளைத்தவர்களை சாடுவதும், அதிகாரத்தில் இல்லாதவர்களைச் சீண்டி பார்ப்பதுமாக மட்டுமே தனது படங்களில் காட்சிகளை வைப்பார். இது அவரின் படங்களை சர்ச்சைகளுடன் அதிக நாட்கள் ஓட வைப்பதற்கான ஒரு யுக்தி மட்டுமேயின்றி வேறில்லை என்கின்றனர் ரஜினியின் செயல்பாடுகளை தொடர்ச்சியாகக் கவனித்து வருபவர்கள்.

திரைத்துறையில் தன்னை ஒரு ஜாம்பவானாக எப்போதும் காட்டிக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், சினிமா வழி அரசியல் பேசுவதில் தான் ஒரு கில்லாடி என்பதை அவ்வப்போது நிரூபிப்பது வழக்கம். அதுபோலவே அரசியல் குறித்த அதிரடி வசனங்களை ரஜினிகாந்த் சினிமாக்களில் பேசும்போது கைதட்டியும் விசில் அடித்தும் கொண்டாடுவது என்பது காலம்காலமாக நடப்பதே.

இருப்பினும் சசிக்கலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் என்ன சொல்கிறார் எனக் கேட்ட போது, "கர்நாடக மாநிலத்தில் அந்த அரசின் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட ஆணையத்தால் வினய்குமார் ஐ.ஏ.எஸ், சசிகலா அவர்கள் சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்லவில்லை என்பது உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

அப்படி இருக்கையில், அதனை திரித்து சட்டப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்ட ஒரு அமைச்சர் பணம் பாதாளம் வரை பாயும் அப்படிப்பட்டவர்கள் இப்படித்தான் ஆவார்கள் எனக் கூறியிருப்பதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்.

உண்மைக்கு மாறான தகவலை பொறுப்புள்ள நடிகர் ரஜினியும், இயக்குநர் முருகதாஸும், சம்மந்தப்பட்ட இயக்குநரும் இந்த வசனம் மூலம் பிறரை பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்கிற நிலை தெரிந்தவுடன் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை அவர்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி அவர்கள் நீக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வோம்" என்றார்

இதையும் படிங்க:அதிகாலை 4 மணிக்கு பூஜை... 6 மணி காட்சியுடன் மும்பையில் தர்பார் கொண்டாட்டம்

Last Updated : Jan 9, 2020, 11:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details