தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால்கே விருது: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி - ரஜினி ட்வீட்

தாதா சாகேப் பால்கே விருது அளித்தற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி
ரஜினி

By

Published : Apr 1, 2021, 1:45 PM IST

Updated : Apr 1, 2021, 2:00 PM IST

திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உள்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அளித்தற்காக மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி

மேலும், என்னை வாழ்த்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர் , மு.க. ஸ்டாலின், கமல் ஹாசன், நண்பர்கள், திரையுலகத்தினர், நலம் விரும்பிகளுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 1, 2021, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details