சென்னை:கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் தமிழருவி மணியன் அவரது கட்சியின் ஆலோசகராக இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.
ஆனால், கரோனா பரவல் மற்றும் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
இதனால் தமிழருவி மணியன் மிகவும் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்து உள்ளதை அடுத்து மீண்டும் ரஜினி அரசியலுக்கு வரப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க, ’இது என்ன வேண்டாத வேளை.... ’மீண்டும் மொதல்ல இருந்தா’’ என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு - 'மீண்டும் முதல்ல இருந்தா' என ரசிகர்கள் கிண்டல்! - super star rajinikanth
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழருவி மணியன் நேற்று சந்தித்துப் பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு - மீண்டும் மொதல்ல இருந்தா என ரசிகர்கள் கிண்டல்!