நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதையடுத்து வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்த ரஜினி ரசிகர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினரும், ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டாம் என்று வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சந்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை அதில், "நம் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட, பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது. மீறி கலந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்சி தொடங்காத ரஜினி! உயிரை விட்ட ரசிகர்!