சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளர் கோபுரம் ஃபிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்சியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியன் இல்ல திருமண விழா இன்று (பிப்ரவரி 21) காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
மணமக்கள் சுஷ்மிதா - மணமகன் சரண் இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வாழ்த்தினர்.