தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"என்னுள்ளே... என்னுள்ளே... ' பாடல் சிறப்பாக அமைய ரஜினியே காரணம் - இளையராஜா பேச்சு! - இளையராஜா கச்சேரி

வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே... என்னுள்ளே... பாடல் சிறப்பாக அமைய ரஜினியே காரணம் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

"என்னுள்ளே... என்னுள்ளே..
"என்னுள்ளே... என்னுள்ளே..

By

Published : Mar 19, 2022, 12:55 PM IST

Updated : Mar 19, 2022, 1:03 PM IST

சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா முதல் பாடலாக ஜனனி ..ஜனனி ' என்ற பாடலைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாடல்களின் இடை இடையே திரைஇசைப் பயணத்தில் தனது அனுபவம் குறித்து இளையராஜா பேசினார்.

இளையராஜா பேச்சு

அப்போது, "தீவுத் திடலில் இசைக் கச்சேரி நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு நன்றி. Sp பாலசுப்பிரமணியனை நினைவுகூர்வதற்கு வார்த்தை வரவில்லை. ஆந்திரா , மேற்கு வங்கம் , மகாராஷ்டிரா என பல மாநிலங்களுக்கு ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று நானும் பாலசுப்ரமணியனும் பாடினோம். லதா மங்கேஷ்கர் மறைவும் வருத்தத்திற்குரியது என்று கூறினார்.

ரஜினி காரணம்

மேடையில் ' என்னுள்ளே... என்னுள்ளே... ' என்ற பாடலை பாடகிகள் சிலர் இணைந்து பாடி முடித்தவுடன், மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா, இந்த பாடல் நன்றாக வர உன்னுடைய மாமனார் தான் காரணம் . ரஜினிகாந்த் ரசனையோடு , காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது என்று கூறிய நிலையில் தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கைதட்டினார்.

மகன்களுடன் தனுஷ்

தனுசுடன் அவரது இரு மகன்களும் இளையராஜாவின் கச்சேரிக்கு வருகை தந்திருந்தனர். இளையராஜா மட்டுமின்றி பாடகர் மனோ , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , பாடகி பவதாரிணி உள்ளிட்டோர் பாடல்களை பாடிய நிலையில், ஸ்பீக்கர்கள் அவ்வப்போது சரியாக இயங்காததால் ஒருமுறை பாதி பாடலிலேயே இளையராஜா பாடலை நிறுத்தி பாடகர்களை மீண்டும் முதலிலிருந்து பாட வைத்தார்.
இதையும் படிங்க :நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?

Last Updated : Mar 19, 2022, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details