நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ’கமல் - 60’ என்ற நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் நடக்கக்கூடிய இந்த ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால், இன்றுவரை ஆட்சி நீடிக்கிறது. இது போன்ற அதிசயம் நாளையும் நிகழும் என்று பேசினார்.
ரீல் தலைவர் ரஜினி..! ரியல் தலைவர் எடப்பாடியார்..! - அதிமுக பதிலடி - ரஜினிக்கு அதிமுக பதிலடி
சென்னை: அதிசயத்தால்தான் பழனிசாமி முதலமைச்சர் ஆனார் என பேசிய ரஜினிக்கு அதிமுகவின் நமது அம்மா நாளேடு பதிலடி கொடுத்துள்ளது.
ரஜினியின் இக்கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’, ரஜினியின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய நீங்களும் சூப்பர் ஸ்டாராக ஆவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள். எடப்பாடியார் படிப்படியாக உழைத்து முதல்வர் ஆகியுள்ளார். ஒரு படத்தில் நடித்து விட்டு மறு வாய்ப்பு வருவதற்கு முன்பே முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எங்கள் எடப்பாடியார் ரியல் தலைவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி!