தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகம் - #RMM

சென்னை : ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

#RMM

By

Published : Jun 22, 2019, 6:50 PM IST

தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று முதல் தி.நகர் பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யும் பணிகள் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது. ஒரு நாள் ஒன்றுக்கு 3 லாரிகள் வீதம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சி.ஆர்.பி கார்டன், அஜிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் இந்த தண்ணீர் அலமாதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அலமாதியிலிருந்து ஒரு லோடு தண்ணீர் கொண்டு வருவதற்கு மூன்று மணி நேரம் ஆவதால், மூன்று வேளைகள் பிரித்து மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. 2026 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லோடு தண்ணீர் 8000 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்

ABOUT THE AUTHOR

...view details