சென்னை:நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, அவரது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி, கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் சிலர் தர்ணாவிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று(டிச.31) மதியம் 3.45 மணியளவில் நடிகர் ரஜினியின் ரசிகரான முருகேசன் (55) என்பவர், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார். போயஸ் கார்டன் ரஜினி வீட்டு முன்பு, அவரது ரசிகர் ஒருவர் திடீரென தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.