தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ் கொலை வழக்கு - ராபர்ட் பயஸ் பரோல் குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறையினருக்கு ஆணை!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ் தன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் கேட்டிருந்த மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 26, 2019, 12:29 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், அவரது மகன் 'தமிழ்கோ'வின் திருமண முன்னேற்பாடுகளைச் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இலங்கை அகதியான தான், ராஜீவ் கொலை வழக்கில் 1991ஆம் ஆண்டு முதல் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், தன்னுடைய கைதுக்குப் பின் தனது மனைவியும் மகனும் இலங்கையே சென்று விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தன் மகன் 'தமிழ்கோ'விற்கு திருமணம் நடைபெற உள்ளதால் திருமண முன்னேற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரியிருந்தார், ராபர்ட் பயஸ்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details