சென்னை:சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் ராஜாகண்ணு குடும்ப உறுப்பினர் கொளஞ்சியப்பன் இன்று மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "1993இல் என் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச்சம்பவம் குறித்து இயக்குநர் ஞானவேல் திரைப்படம் எடுப்பதாகக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு என்னை சந்தித்து என்னிடம் கேட்டு, நான் எழுதி வைத்திருந்த நோட்டை வாங்கிச் சென்றார். அதுமட்டுமின்றி இதற்காக எனக்கு ரூ.1 கோடி மற்றும் படத்தின் ராயல்டியில் 20% வழங்குவதாக தெரிவித்தார்.
ராஜாகண்ணு குடும்பத்தினர் மனு ஆனால், படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆகியும் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை" என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பாரி கூறும்போது, "2D என்டர்டெயின்மென்ட் படத்தயாரிப்பு நிறுவனம், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் கதைக்கான ராயல்டி தரவில்லை. இதுதொடர்பாக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜாகண்ணு குடும்பத்தினர் மனு அதுமட்டுமின்றி நாங்கள் ராயல்டி பெற கூடாது என்பதற்காக கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. ராஜாகண்ணு குடும்பத்திற்கு ராயல்டி வழங்காமல், கருணைத்தொகையினை மட்டுமே சூர்யா தனது அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளார். எனவே இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம்" என்று தெரிவித்தார்.
ராஜாகண்ணு குடும்பத்தினர் மனு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இத்திரைப்படம் வெளியாகி பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. சர்வதேச விருதுகள் முதல் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jai Bhim: ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய சூர்யா