சென்னை: இளையராஜா குறித்து ராஜ் கிரண் தெரிவித்துள்ள கருத்தில், “அண்ணன் இளையராஜா இசையை தவிர வேறு எந்த உலக விஷயங்களிலும் எவ்வித ஞானமும் இல்லாத மிக மிக சாதாரண மனிதர்.
அவரை எல்லாம் தெரிந்த மிகப்பெரிய ஆளாக வரித்துக்கொள்வதால்தான், இவ்வளவு ஆதங்கங்கள். பிஜேபியின் ஆதரவாளராக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது அவருக்கான சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.