சென்னை :சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த. அறம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் பேசிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொது செயலாளர் த.அறம், "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே 21,22,23 தேதிகளில் நடைபெற்றதாகவும் அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை இந்தி சமஸ்கிருத தினிப்பை செய்கிறது.இந்துத்துவ பண்பாட்டை உள்ளே திணித்து அதன் மூலம் ஜாதியை உள்ளே நிலை நிறுத்துகிற வகையில் குலத்தொழிலை வலியுறுத்துகிறது.
கல்வியை முழுமையாக வணிக மயமாக்கி கார்ப்பரேட் மயமாகும் இந்த காரணங்களால் இதை திரும்ப பெற வேண்டும். கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது அதை முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றி மாநில உரிமையை பறிக்கும் வகையில் இந்த கல்விக் கொள்கை உள்ளது. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது திரும்பப் பெற வேண்டும்.
நவீன அறிவியல் மருத்துவத்தை மத்திய அரசு ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது மூடநம்பிக்கையை வலிந்து திணிக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தை இந்து மருத்துவமாக முத்திரை குத்தி அதை இந்திய மருத்துவம் ஆக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.