தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும் கட்டுமான கழிவுகளை அகற்ற வேண்டும்’ - சென்னை மாநகராட்சி உத்தரவு! - ககன்தீப் சிங்பேடி

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன், கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

corporation
corporation

By

Published : Sep 10, 2022, 10:18 PM IST

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஏற்கனவே உள்ள 2,071 கிலோ மீட்டர் நீளத்தில், மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, சுமார் 1,350 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி முன்னிலையில், நேற்று (செப்.9) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூமஹாஜன், டி.சினேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிவ்தாஸ் மீனா மற்றும் ககன்தீப் சிங்பேடி கேட்டறிந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன், கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றுவதை அந்தந்த வார்டு உதவி பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், இதேபோல் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு, அவை உடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் மின் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினர். மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொள்ளவும், மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டினை தயார் செய்யவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details