தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையை வெளுத்து வாங்கும் வெயில் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai
chennai

By

Published : May 5, 2020, 3:07 PM IST

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.

மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் காலை 11:30 முதல் பிற்பகல் 3:20வரை வெளியில் செல்வதையும் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 3 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் முற்பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், மாலை நேரங்களில் வானம் தெளிவாகவும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி

ABOUT THE AUTHOR

...view details