நிவர் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் இப்புயல், இன்று (நவம்பர் 25) இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் - சென்னை மழை நிலவரம் - அயனாவரம்
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1403 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை தொடர்பாக, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அயனாவரம் 105 மி.மீ, நுங்கம்பாக்கம் 137 மி.மீ, கிண்டி 143.20 மி.மீ, மாம்பலம் 136.20 மி.மீ, மயிலாப்பூர் 140.60 மி.மீ, பெரம்பூர் 104.30 மி.மீ., புரசைவாக்கம் 148.20 மி.மீ., தண்டையார்பேட்டை 113 மி.மீ., ஆலந்தூர் 119.60 மி.மீ., அம்பத்தூர் 110 மி.மீ., சோழிங்கநல்லூரில் 145 மி.மீ மழை என சென்னையில் மட்டும் 1,403 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்