தமிழ்நாடு கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் (1.5 முதல் 3.6 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கர்நாடகாவிலிருந்து தென் கேரளம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும்
ஏப்ரல் 28, 29, 30, மே 1, மே 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழ்நாடு உள் மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.