இது தொடர்பாகத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி , விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை போன்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்! - Meterological department
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் கோவை ,நீலகிரி ,தேனி, திண்டுக்கல் ,விருதுநகர் , நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் தகவல்
வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழையும், சின்ன கல்லாரில் 7 செ.மீ மழையும், தேவாலாவில் 5 செ.மீ மழையும், நீலகிரியில் 4 செ.மீ மழையும், தஞ்சாவூர், பேச்சிப்பாறை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என கூறப்பட்டுள்ளது.