நிவர் புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் - நோயாளிகள் இடமாற்றம் - Rain water on Tambaram Government Hospital
சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை தாழ்வான பகுதி என்பதால், கனமழை காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் புகுந்து நோயாளிகளின் அறைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், நோயாளிகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி, மழை நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.