இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
வட தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் - chennai meteorological department
சென்னை: தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக வட தமிழ்நாடு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை அக்டோபர் 14ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.