தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2021, 3:17 PM IST

ETV Bharat / state

வங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

”வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-update
rain-update

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வடக்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி,தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 14,15 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

ஜூன் 16,17ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம்:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

ஜூன் 14ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)

சின்னக்கல்லார் (கோவை) 5, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 4, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 3, பெரிய காலாபேட்டை (புதுச்சேரி), அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), ராசிபுரம் (நாமக்கல்), வானுர் (விழுப்புரம்), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 2, மணமேல்குடி (புதுக்கோட்டை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), தென்பறநாடு (திருச்சிராப்பள்ளி), பாபநாசம் (திருநெல்வேலி), மரக்காணம் (விழுப்புரம்), மீமிசல் (புதுக்கோட்டை), மயிலாடுதுறை தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 13 முதல் ஜூன் 15 வரைமன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடக, கோவா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 13 முதல் ஜூன் 17வரைஅரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ABOUT THE AUTHOR

...view details